கணித,விஞ்ஞான,தொழில் நுட்பத்துறைகளை மேம்படுத்தும் பொருட்டு கனடிய அரசாங்கம் பி.எச்.டி (Doctor of Phylosophy) மாணவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கடந்த புதன் கிழமை அறிவித்துள்ளது. நிபுணத்துவ தோர்ச்சி பெற்ற பணியாளர் நகரத்தை விரிவுபடுத்த கனேடிய அரசு விரும்புவதாகவும் கனேடிய விஞ்ஞான தொழில் நுட்ப உதவி அமைச்சர் ஹரிகுட் இயர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான தொழில் நுட்ப  பொறியியல் கணிதத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தோர் குறைவாக இருப்பதால் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு பிச்.எச்.டி மாணவர்களை உள்ளீர்க்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் தொடர்ந்தும் அங்கு இருக்க விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டதே இந்த அறிவிப்பாகும்.

சிறப்புத் தோர்ச்சி பெற்ற பணியாளர் நிகழ்ச்சித் திட்த்தில் தகைமையைப் பெறுவதற்கு பி.எச்.டி மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். உலகளாவிய ரீதியில் கண்டு பிடிப்பாளர்களின் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயாராகியிருக்கிறது.

கடந்த வருடம் 2,80,681பேரை நிரந்தர வதிவிடங்களாக கனடா ஏற்றுள்ளது.  இவர்களில் 67சதவீதமானோர் பொருளாதார குடியேற்ற வாசிகள் எனவும் அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது.

இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 5ம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply.